நாட்டை வந்தடைந்த முதல் pfizer தடுப்பூசி தொகுதி!

நாட்டை வந்தடைந்த முதல் pfizer தடுப்பூசி தொகுதி!


அமெரிக்க தயாரிப்பான pfizer கொரோனா தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.

கட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலைய மூடாக இன்று (05) அதிகாலை 2.15 அளவில் குறித்த தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி,26 ஆயிரம் pfizer கொரோனா தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

தெற்காசிய நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிடம் இருந்து 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் தினுஷா தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஏனைய 1 லட்சத்து 74 ஆயிரம் pfizer தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.