வக்ப் சபை உயர் அதிகாரியின் தூர சிந்தனையற்ற முடிவு விபரீதங்களை ஏற்படுத்துமா?

வக்ப் சபை உயர் அதிகாரியின் தூர சிந்தனையற்ற முடிவு விபரீதங்களை ஏற்படுத்துமா?


பள்ளிவாசல்களில் உளூஹீயாவுக்கான வக்ப் சபையின் மாடறுப்பு தடை தீர்மானம் தற்போது ஒரு சர்சைக்குறிய விடயமாக மாறியுள்ளது. 

இவர்களின் தூர சிந்தனையற்ற முடிவு நாட்டில் சிக்கல் நிலைமையை ஏற்படுத்துமா?

தற்காலத்தை பொறுத்தவரை வீடுகளில் அனேகமாக மாடறுப்பதற்காண
இடவசதிகள் குறைவாகவே காணப்படுகின்றன. இதனால் அனைத்து இடங்களிலும் உளூஹீயாவுக்கான பிராணிகள் ஒரு பள்ளிவாசலுக்கு கொண்டு, வரப்பட்டு அங்கே கடமைகள் நிறைவேற்றப்பட்டு, உரியவர் தனக்கு தேவையான அளவை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவைகளை பள்ளி நிர்வாகம் ஊர்களில் பகிர்ந்தளிக்கும் முறையே நாட்டில் பின்பற்றப்பட்டு வருகின்றது.

ஊர் பகுதிகளில் பெரிய இடங்களில் காணிகளைக் கொண்ட இடங்களைத் தவிர அத்துனை இடங்களிலும் இவ்வாறான நடைமுறையிலேயே தற்போது உளூஹீயா நடைபெற்று வருகின்றது.

மேலும் தற்காலத்தில் முஸ்லிம் வீடுகளுக்கு அண்மையில் மாற்று மத மக்களும் சேர்ந்து வாழும் நிலை உள்ளதால், வீடுகளில் பிராணிகளை அறுப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதன் காரணமாகவே மாற்று வழியாக பள்ளிவாசல்களில் உளூஹீயா நிறை வேற்றும் நடை முறை கைக்கொள்ளப்பட்டது.

தற்போது ஒரு பள்ளிவாசலில் சுமார் இருபது முதல் முப்பது வரையிலான பிராணிகள் அல்லது அதற்கு மேற்பட்ட பிராணிகள் அறுக்கப்பட்டுகின்றன. இவை பத்துப் பள்ளிவாசல்களில் தடுக்கப்படும் போது அது சுமார் முண்னூறு வரையிலான கணக்கை எட்டி விடுகின்றன. இவை முண்னூறு இடங்களில் அறுக்கப்படும் போது நிலைமை சிக்கலாக மாறும்.
இதே விடயம் நாடு பூராகவும் அறுக்கப்படும் ஆயிரக்கணக்கான பிராணிகளின்
எண்ணிக்கையுன் ஒப்பிட்டு பார்க்கும் போது ஆயிரக்கணக்கான வீடுகளில் நிறைவேற்ற வேண்டியுள்ளது. ஆயிரக்கணக்கான இடங்களில் பாதுகாப்பாகா துப்பரவு செய்ய வேண்டியுள்ளது. இதில் நமது மக்கள் அனைவரும் கவணமாக வழிமுறைகளை கடைப்பிடிப்பார்கள் என்பதில் நிச்சயமில்லை. இதனால் பின் விளைவுகளும் விபரீதங்களும் ஏற்படும் சந்தர்ப்பங்கள் மிக அதிகம். ஆக இவ்வாறான முடிவு கட்டுப்பாடுகளை தளர்த்தியது என்றே கூறவேண்டும்.

இவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாக இருந்தால், மாடறுப்புக்கு எதிரான கேசத்தை மேலும் அதிகரிக்கும். எனவே இதன் தடையின் பின்னணியையும் சற்று சிந்திக்க வேண்டும்.

ஆனால் பள்ளிவாசல்களை பொறுத்தவரை அதன் சுற்றுச் சூழல் முஸ்லிம் மக்களைக் கொண்டது. மேலும்  பள்ளிவாசல் நிர்வாகிகளால் கவணமாக கண்காணிக்கப்பட்டு பள்ளிவாசல்களில் அதற்காண ஏட்பாடுகளும் போதியளவு இடவசதிகளும் காணப்படுவதால், கழிவுகளும் மிகுந்த கவணத்துடன் புதைக்கப்படுகின்றன.

மேலும் கடந்த கால சிறு சிறு நிகழ்வுகளை மீட்டிப் பார்க்கும் போது வீடுகளில் கழிவுகள் கவனையீணமாக கையாளப்படாததினால் வந்த பிரச்சினைகளே தவிர, எந்தப் பள்ளிவாசல்களிலும் இதனால் பிரச்சினைகள் ஏற்பட்டதாக பதிவுகள் இல்லை.

எனவே இதைப் பற்றியும், நாட்டின் தற்போதைய கலநிலவரம் பற்றியும் சிந்திக்காமல், பள்ளிவாசல்களை மாடறுக்கும் இடமாக மாற்றும், பள்ளிவாசல்களின் தூய்மை கெட்டுவிடும் என்ற, கருப்பொருல் அற்ற, சிந்தனைக்கு அப்பால் பட்ட, கற்பனை வாதங்களை முன்வைப்பதில் நிலமை சிக்கலாகுமே தவிர, அனுகூலங்கள் ஏதும் நடக்கப்போவதில்லை.

உளூஹீயா அறுப்பதில், பள்ளிவாசல்கள் மாடறுக்கும் இடமாகாகவும்  பள்ளிவாசலின் தூய்மை கெட்டுவிடும் என்பதும் சிந்தனைக்கு பொருத்தமில்லாத வாதமாகும். 

உளூஹீயா அறுப்பதனால் பள்ளிவாசல்கள் மாடறுக்கும் இடமாவும் அதன் தூய்மை கெட்டுவிடப் போவதுமில்லை.

மாற்று மதத்தினர் தவராக புரிவார்கள் என காரணமும் ஏற்கக்கூடியதல்ல.  பள்ளிவாசல்களில் இன்று நேற்று குர்பான் அறுப்பதல்ல. இது காலா காலம் தேவைக்கு ஏற்றால் போல் நடைபெறுகின்றது. இது வரை பள்ளிவாசல்களில் குர்பான் அறுத்தற்காக எங்கும், எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. இது முஸ்லிம் மக்களின் ஒரு வணக்கம் என்பதையும் மாற்று மதத்தினர்
அறிந்து வைத்துள்ளனர்.

எனவே வக்ப் சபையும் முஸ்லிம் கலாச்சார அமைச்சும் இம் முடிவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். 

இந்நிலைமை மாற்றப்படாத பட்சத்தில் இது சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு இவர்களே பொறுப்புக் கூற வேண்டும்.

-பேருவளை ஹில்மி

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.