இரு வார காலத்திற்கு பஸ் மற்றும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்!

இரு வார காலத்திற்கு பஸ் மற்றும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்!

மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

பஸ் மற்றும் புகையிரத சேவைகள் இரு வார காலத்திற்கு நிறுத்தப்படும் என்று பயணிகள் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இந்த இடைநிறுத்தமானது நாளை (17) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் பயணத் தடை நீக்கப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை இன்றுவரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவை ஊழியர்களின் பொது போக்குவரத்தை செயல்படுத்த மாத்திரமே பயணத் தடை ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும், மாகாணங்களுக்கு இடையேயான பொது மக்களுக்கான பயணத் தடை நடைமுறையில் உள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.