
உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பெண் ஒருவரை திருமணம் செய்த குறித்த நபர் அவரை பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்ய முயற்சித்ததாக தெரியவருகிறது.
கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இவர் இதற்கு முன்னரும் 36 வயது வெளிநாட்டுப் பெண் ஒருவரை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.