ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி தொடர்பிலான செய்தி!

ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி தொடர்பிலான செய்தி!

ஆசிரியர்களில் 63 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த வருடம் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தக் கால எல்லை எதிர்வரும் 31ம் திகதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.