
கொரோனா பரவலை தொடர்ந்து மிருகக்காட்சிசாலைகள் மூடப்பட்டதோடு வருமானம் இழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தெஹிவலை மிருகக்காட்சிசாலை மட்டுமல்ல, நாட்டின் அனைத்து உயிரியல் பூங்காக்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமை குறித்த சுகாதார வழிகாட்டுதலின் கீழ் உயிரியல் பூங்காக்கள் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)