இருண்ட யுகத்தை நோக்கிய இலங்கை தினரும் ஆளும் கட்சியும் திண்டாடும் எதிர் கட்சியும்!

இருண்ட யுகத்தை நோக்கிய இலங்கை தினரும் ஆளும் கட்சியும் திண்டாடும் எதிர் கட்சியும்!

இலங்கையில் இறுதியாக நடந்த ஆட்சி மாற்றத்தின் போது இலங்கையின் மொத்த வாக்குகளில் சுமார் 69 இலட்சம் வாக்குகளை மட்டும் ஆளும் கட்சி பெற்றிருந்தாலும், ஆட்சி பீடம் ஏறிய பிற்பாடு அரசினால் முன்வைக்கப்பட்ட சிறந்த, வரவேற்கப்பட்ட வேலைத்திட்டங்கள், அரச செலவுகளை குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள், தேவையற்ற பொருட்களின் இறக்குமதித் தடை, அரச வாகன இறக்குமதிக்கான தடைகள் போன்ற சிறந்த பொருளாதார முனெடுப்புக்களை, அரச நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான இருக்கமான கட்டுப்பாடுகள், இலங்கையின் பொருளாதாரத்தை முனேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டங்களால், இந்த அரசுக்கு வாக்களிக்காத மக்களும், அரசை வரவேற்கும் நிலை உருவானது. மக்களின் எதிர் பார்ப்பு நம்பிக்கை ஒரளவு உருவானது.

ஆனால் காலப் போக்கில் அரச நிர்வாகத்தில் ஏற்பட்ட பாரிய ஊழல்கள், பெரும் அலவிலான அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம், அரச நிர்வாக சீர்கேடுகள், காணமாக கூடிய சீக்கிரத்தில் அதிகரித்த அரசின் செல்வாக்கு, அதேவேகத்தில் சரிவடைய ஆரம்பித்தது.

இதைத் தொடர்ந்து சர்வதேச ரீதியில் ஏற்பட்ட கொரோனா தொற்று, எதிர் பாராத விதமாக நம் நாட்டில் ஏற்பட் இதன் அதிகரிப்பு, உலகை ஆக்கிரமித்த தொற்று, இதனால் ஏற்பட்ட அரச வருமான இழப்புக்கள், இதனால் இலங்கையின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்திய வெளிநாட்டு வேலை வாய்ப்பு வருமானத்தில் ஏற்பட் பாரிய வீழ்ச்சி, இவ்வாறான நெருக்கடிகள் அரச இயக்கத்தை மேலும் பாதித்தது.

இதற்கு மத்தியில் அரசுக்கு எதிராக அமைந்த ஜனீவா தீர்மானம் போன்றவற்றினால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச நெருக்கடிகள், சர்வதேச அழுத்தங்கள், உள்நாட்டுக்குள் ஊடறுத்து நிற்கும் சீனத் தலையீடு, வெளி உதவிகளில் தங்கி வாழும் நாடு என்றவகையில், உதவி செய்யும் நாடுகளின் அதிருப்தி, போன்றவற்றால் வெளிநாட்டு உதவிகள் தடைப்பட்டமை காரணமாகவும், மேலும் பல நெருக்கடிகளை நாடு எதிர் நோகியுள்ளது.

இதற்கு மத்தியில் நடப்பு நிதியாண்டின் அரச வருமானத்தை வைத்தே அடுத்த வருடத்திற்கான நிதித் திட்டமிடலைச் செய்யவேண்டியுள்ளது. நடப்பு வருடத்தின் அரச வருமானங்கள் மிகவும் வீழ்ச்சியடைந்த நிலையில், ஏற்கனே ஒவ்வொரு வருடத்திற்கான வரவு செலவில் பற்றாக்குறை, துண்டு விழும் நிலையில், ஒவ்வெரு வருடமும் அரச செலவுக்காக வெளிநாட்டில் கடன் வாங்க வேண்டிய நிலையில், அடுத்த வருடத்தின் வங்கிய கடனுக்கான வட்டி, அரச செலவீனங்கள், போன்ற நிதித்திட்திட்டமிடல்களை அரசு எவ்வாறு சமாளிக்க போகின்றதது என்ற சவால் அரசை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் நாட்டிற்கு வருமானத்தை கொண்டுவந்து சேர்க்கும் நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி இலங்கை தற்போது நகர்ந்துள்ளதை இலங்கை மத்தியவங்கியின் கீழ் உள்ள தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.3 சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் பதிவான இறுதியான வளர்ச்சி வீதத்தின் 1.1 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, இதன் பின்னர் இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை நாடு சந்தித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் அந்நிய செலாவனி இருப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் சில இறக்குமதிக் கட்டுப்பாடுகளை மேற் கொண்டாலும், அதன் மீதான பொருளாதாரத்தாக்கம், எதிர் முனையிலான தாக்த்தை பொருமளவில் ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக அரசாங்கம் வாகன இறக்குமதியை கட்டுப்டுத்தினாலும் அதன் எதிர்தாக்கம் நாட்டில் வரி வருமானத்தில் பொருமலவு பாதிப்பை ஏற்படுதியுள்ளது.

இலங்கையில் வாகத்திற்கான இறக்குமதி அதன் பெருமையை விட, வரி வருமானம் 400% மடங்காக இருப்பதால் இதன் எதிர்தாக்கம் பொருமளவில் பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுதியுள்ளது.

மேலும் அதிருப்திகளின் காணமாக துறைசார்ந்த நிபுணர்கள் நாட்டுக்காண தமது பங்களிப்பை வழங்குவதில் பின் வாங்குவதல், நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நடவடிக்கை போன்றவை, நாட்டின் எதிர்காலத்தை இருண்ட யுகம் ஒன்றுக்கு இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

2023 ஆம் ஆண்டு, வரையில் ஆகும் காலப் பகுதிக்கு 13 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் மீளச் செலுத்தும் கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது.

வருமானத் திட்டமிடல் இல்லாத நிலையில் இதைச் செலுத்துவதற்கு உள்நாட்டு வருமானம், இறக்குமதி வருமானம், குறைவான நிலையில் இப் பெரும் கடன் தொகையை செலுத்த மேலும் கடன் பெற வேண்டிய சூழல் தற்போது காணப்படுகின்றது. இவ்வாறு கடனுக்கு மேல் கடனும், தலை கீழான வீழ்ச்சியுடனும் காணப்படும் இலங்கையின் பொருளாதாரம், தொடர்ந்து வரும் காலண்டுகளில்பெருமளவு சவால்களுக்கு முகங்கொடுப்பதாகவே அமைந்திருக்கும்.

எனவே நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் நன்மைகளை அனுபவிப்பது சாத்தியக் குறைவாகவே காணப்படுகிறது.

அரசியல் நோக்கங்களுக்காக விலைக் குறைப்பு என மக்களுக்கு குறுகிய கால விமோச்சங்கள் மக்களுக்கு கிடைத்தாலே தவிர, இவ்வாறான ஒரு நிலையில் மக்களுக்கு விமோச்சனம் என்பது கனவாகவே தெரிகிறது.

அரசியல் வாதிகள் அரசியல் நோக்கங்களுக்காக அத்தியவசிய பொருற்களின் விலைக் குறைப்பு, மக்களுக்கான பொருளாதார நண்மைகள், போன்றவற்றை வாக்குறுதியாக வாங்கினாலும், நாளுக்கு நாள் அரச புள்ளி விபரவியல்களில் இருத்து இதன் சாத்தியப்பாடுகள் பற்றி இலகுவாக விளங்க முடிகின்றது.

நாட்டின் அரசியல் நிலையை பொருத்த வரையில் ஆளும் அரசு, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் உத்திகளை நிபுணத்துவங்களை கைக் கொள்வதாகத் தெரியவில்லை.

வெளிநாட்டுக் கடன்களில் தங்கி நிற்கும் அபாயகரமான பொருளாதார ஸ்திரனமற்ற நாட்டின் நிலையில், நாட்டின் கடனை செலுத்த மீள் கடன் வாங்கும் நிலையில், ஆளும் கட்சியானது தினரும் நிலையில்.

எதிர்கட்சியை பொருத்தவரை ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்து சிறந்த பொருளாதார யோசனைகளை முன்வைத்து, இதற்கான வழிவகைகளை அலேசனைகளை முன்வைத்து சாதகமான நடவடிக்கைகளை மேற் கொள்வதாககவும் இல்லை.

இவ்வாறாக நாட்டின் முன்னேற்றத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் சிந்திக்காமல் மாறி மாறி இரு கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றுவதில் குறிக்கோலாக இருக்கும் நிலையில் நாட்டின் எதிர்காலம் இருண்ட யுகத்தை நோக்கி தள்ளப்படும் துப்பாக்கிய நிலை தடுக்க முடியாது.

நாட்டின் நிரந்தர வருமானமான உள்நாட்டு உற்பத்தி மிகவும் வீழ்ச்சியடைந்துவெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், உள் நாட்டிற்குள் உற்பத்தியாளர்களுக்கு சலுகைகளையும் உதவிகளையும் வழங்கி உள் நாட்டிற்குல் வருமானத்தை தக்கவைத்துக் கொள்வது அரசினால் செய்யப்பட்ட வேண்டிய செய்ய முடிந்த காரியமாகும். இவ்வாறான ஒரு முயற்சியையும் நாட்டின் பொருளாதார நலனுக்காக அரசு நடவடி‌க்கைக்கு முயற்சிக்காமல், அதில் மீள் முதலீடு செய்யாமல், இருப்பது நட்டினை இருண்டயுகம் ஒன்றிற்கும் தள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

(புள்ளி விபரங்கள் இலங்கை மத்திய வங்கியின் தொகை மதிப்பீட்டு புள்ளி விபரங்களில் இருந்து)

- பேருவளை ஹில்மி
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.