இலங்கைக்கு எதிராக பங்குபற்றிய இங்கிலாந்து கிரிக்கட் வீரர்கள் மூவருக்கு கொரோனா உறுதி!

இலங்கைக்கு எதிராக பங்குபற்றிய இங்கிலாந்து கிரிக்கட் வீரர்கள் மூவருக்கு கொரோனா உறுதி!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரில் பங்குபற்றி இங்கிலாந்து கிரிக்கட் வீரர்கள் மூவர் மற்றும் உதவி ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு இலக்கான வீரர்களின் பெயர்களை இங்கிலாந்து கிரிக்கட் வாரியம் இதுவரை அறிவிக்கவில்லை.

இங்கிலாந்து பிரதான கிரிக்கட் அணி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை மற்றொரு இங்கிலாந்து அணியுடன் விளையாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.