
இந்த தகவலை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில்ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களுடைய தேவையை நிறைவேற்றுவதற்கான மிளகாயை நாட்டினுள் உற்பத்தி செய்ய விஷேட வேலைத்திட்டம் ஒன்றை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மஞ்சள் இறக்குமதிக்கு தடை, உரம் இறக்குமதி தடையால் விவாயிகள் விளைச்சலின்றி பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மிளகாய் இறக்குமதிக்கும் தடை விதிக்கவுள்ளது அரசு.