உலகின் மிகப்பெரிய இரத்தினக்கற்பாறையின் உரிமையாளர் இவர் தான்!

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கற்பாறையின் உரிமையாளர் இவர் தான்!

உலகிலேயே மிகப் பெரிதென நம்பப்படும் இரத்தினக்கற்பாறை இலங்கையின் இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதன் உரிமையாளர் யார் என்ற விபரம் வெளியாகி உள்ளது.

இதன்படி கமகே என்பவரே இவ்வாறு பெரும் மதிப்புள்ள மாணிக்க கல்லுக்கு சொந்தக்காரர் என்பதுடன் அவர் தனது முழு பெயர் மற்றும் வதிவிடத்தை பாதுகாப்பு கருதி வௌியிடாமல் உள்ளார்.

இந்த கல்லை சுத்தப்படுத்தி சரியான பெறுமதியை கணக்கிட ஒரு வருடங்கள் ஆகும் என கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை "இது சிறப்பான நட்சத்திர நீலக்கல் தொகுப்பு. உலகத்திலேயே இதுதான் பெரியதாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்தக் கல் மீது அருங்காட்சியகங்களுக்கும், இரத்தினங்கள் சேகரிப்போருக்கும் ஆர்வம் ஏற்படும் என நினைக்கிறோம்," என்று இலங்கை தேசிய இரத்தினங்கள், ஆபரணங்கள் கூட்டுத்தாபன தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில், சுமார் 100 மில்லியன் டொலர் வரை மதிப்பு கொண்டது எனவும் இலங்கை பெறுமதியில் 4000 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நீலகல் சுமார் 510 கிலோகிராம் அல்லது 2.5 மில்லியன் கரட்ஸ் எடையைக் கொண்டுள்ளது. இந்த மாணிக்க கல்லுக்கு "Serendipity Sapphire”என்று பெயரிடப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக இலங்கையின் இரத்தின தொழில்துறை மிகப்பெரிய இழப்பை சந்தித்திருக்கும் சூழ்நிலையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.