
குற்றவாளிகளை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தவேளை சிறுமி உயிரிழந்தமை குறித்த விபரங்களையும் அதனுடன் தொடர்புபட்ட சம்பவங்களையும் மூடிமறைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொலிஸார் மற்றும் ஏனைய அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என ஓமல்பே தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் கொலைகாரர்கள் திருடர்கள் நாடாளுமன்றத்தை தங்கள் அதிகாரத்திற்கான இடமாக மாற்றியுள்ளனர் என தெரிவித்துள்ள ஓமல்பே சோபித தேரர் ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் தொடர்ந்தும் நாடாளுமன்ற கடமைகளை நிறைவேற்ற அனுமதிப்பது குறித்து ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெட்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.