கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா-இலங்கை கிரிக்கட் போட்டிகள் ஒத்திவைப்பு - புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டன!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா-இலங்கை கிரிக்கட் போட்டிகள் ஒத்திவைப்பு - புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டன!

இலங்கை கிரிக்கட் அணியில் கொரோனா அச்சுறுத்தல் காரணத்தினால் இந்தியா-இலங்கை ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சிவிப்பாளர்கள் இருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.  எவ்வாறாயினும் எந்தவொரு வீரரும் கொரோனா தொற்றுக்கு இலக்காக போதிலும் இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த அனைத்து வீரர்களும் எதிர்வரும ஞாயிற்றுக்கிழமை வரை கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒருநாள் சர்வதேச போட்டிகள் இப்போது ஜூலை 17, 19 மற்றும் 21 ஆகிய திகதிகளிலும, டி20 போட்டிகள் ஜூலை 24, 25 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.