க.பொ.த சாதாரண தர பரீட்சை 2020 பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் இது தான் - கல்வி அமைச்சர்

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2020 பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் இது தான் - கல்வி அமைச்சர்

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2020 பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை கல்வி அமைச்சர் விளக்கினார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அழகியல் பாடங்களைப் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு நடைமுறைத் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையே இத்தாமதத்திற்கு காரணம் என்று அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 50% இற்கும் அதிகமானோர் அழகியல் பாடத்தை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், நடைமுறைத் பரீட்சைகளை நடத்த முடியாவிட்டால், பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.