குடும்பமாக சேர்ந்து கொடூரமாக கொல்லப்பட்ட மகன்!

குடும்பமாக சேர்ந்து கொடூரமாக கொல்லப்பட்ட மகன்!

இளைஞன் ஒருவரை குடும்பமாக சேர்ந்த தாக்கி கொலை செய்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மினிபோ, ஹசலக, அத்தேஎல பகுதியில் தந்தை, தாய், சகோதரி மற்றும் சகோதரியின் கணவன் இணைந்து கொடூரமாக தாக்கியதில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

28 வயதான சுனில் நிஷங்க என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 06ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 08ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இறந்தவரின் தந்தை, தாய், சகோதரி மற்றும் சகோதரியின் கணவன் ஆகியோரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹியங்கனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.