15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிரபல தேரர்????

15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிரபல தேரர்????

கல்கிஸ்ஸை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு பிரபலமான தேரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பல இணைய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சிறுமிக்கு பெரும் தொகையான பணத்தை செலுத்தி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

​​சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் சிறுமிக்காக பெருமளவிலான பணத் தொகையை செலுத்தியுள்ளதாகவும தெரிய வந்துள்ளது.

விசேட மருத்துவர், பிரதேச சபை தலைவர் ஒருவர், பல பொலிஸ் அதிகாரிகள், பாடகர் ஒருவர் மற்றும வர்த்தகர்கள் குழு ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அரசியல் பிரமுகர் ஒருவரும் மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.