சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக முன்னாள் இலங்கை கிரிக்கட் அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை கிரிக்கட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடி வருவதாகவும், எதிர்வரும் வாரங்களில் தனது முடிவை தெரிவிப்பதாகவும் மேத்யூஸ் (34) இலங்கை கிரிக்கட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளார்.

அணித் தேர்வுக் குழு இளம் அணியை தேர்வு செய்ததன் பிற்பாடு, ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக தெரிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.