பிலிப்பைன்ஸ் விமானம் விபத்து - 85 பேருடன் தீப்பிடித்தது!

பிலிப்பைன்ஸ் விமானம் விபத்து - 85 பேருடன் தீப்பிடித்தது!

பிலிப்பைன்ஸ் விமானப்படையின் சி -130 என்ற ராணுவ சரக்கு விமானம் சுலுவில் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானது. 85 பேருடன் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் நேரப்படி காலை 11:30 மணியளவில் ராணுவ சரக்கு விமானம் இந்த கோர விபத்தில் சிக்கியிருப்பதாக ஊடக செய்திகளில் சொல்லப்படுகிறது. விபத்துக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.

விமானம் சுலுவில் உள்ள ஜோலோ துறைமுகத்தில் தரையிறங்கிய போது போது விபத்தில் சிக்கியிருக்கிறது. மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றன.

85 பேர் சென்றர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் இராணுவ சரக்கு விமானத்தில் இருந்து இதுவரை குறைந்தது 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் தலைமை ஜெனரல் சிரிலிட்டோ சோபெஜானா உறுதிப்படுத்தினார். சி -130 விமானத்தில் குறைந்தது 85 பேர் சென்றதையும் அவர் உறுதிப்படுத்தினார். இந்த விபத்தில் இதுவரை மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

விமானப்படை தளத்தில் களம் இறங்கி உள்ளனர். இந்த விபத்தில் இருந்து அதிக உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று இராணுவ தளபதி சிரிலிட்டோ சோபெஜானா தொலைபேசி பேட்டியில் கூறினார்.

விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் இராணுவ வீரர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் 11 வது காலாட்படை பட்டாலியனின் கூட்டு பணிக்குழுவினர் ஆவர். பணிகளுக்காக சுலுவுக்கு இராணுவ விமானத்தில் சென்றிருக்கிறார்கள்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.