இனி 30 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி!

இனி 30 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி!

மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி போடுமாறு சுகாதாரத் துறைக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது, குறித்த வயதினருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் கொழும்பு மாவட்டத்தில் 60% ஆனோருக்கும்  கம்பஹா மாவட்டத்தில் 47% ஆனோருக்கும், களுத்துரை மாவட்டத்தில் 34% ஆனோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஓடர் செய்யப்பட்ட தடுப்பூசிகளைப் பெற்றதுடன், முறையான திட்டத்தின் கீழ், செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதிக சதவீத தடுப்பூசிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கோவிட் சிறப்புக் குழுவுடன் நடந்த சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை முதல் மருத்துவமனைகளில் தடுப்பூசி தொடங்கப்பட்டதன் மூலம், ஏராளமான மக்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடிந்தது, நாடு முழுவதும் இந்த நடைமுறையைத் தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.