பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றது - அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அறிவிப்பு

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றது - அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அறிவிப்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடசாலைகளை ஜூலை மாதம் மீண்டும் ஆரம்பிக்க  அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று (02) அறிவித்தார்.

நாடு முழுவதும் 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3000 பாடசாலைகள் 100 இற்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

ஏனைய பாடசாலைகள் பல கட்டங்களின் கீழ் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இருப்பினும், மொபைல் சிக்னல்கள் இல்லாததால் பல மாணவர்கள் ஆன்லைன் விரிவுரைகளில் கலந்து கொள்ள முடியாமல் காணப்படுகின்றது.  (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.