கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 20 ஆயிரம் ஊக்கத் தொகை? அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு!

கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 20 ஆயிரம் ஊக்கத் தொகை? அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு!


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால் 100 டொலர் (சுமார் 20 ஆயிரம் ரூபா) ஊக்கத் தொகை வழங்க மாநிலங்களுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று வீதம் மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில், ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 

'டெல்டா திரிபு மிக வேகமாகப் பரவி வருவதால் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்படுகின்றன. தடுப்பூசி போடாதவர்களின் தொற்றுநோயால் மோசமடைந்தது.

எனினும், தடுப்பூசி போட மறுப்பவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். பண ஊக்கத்தொகை ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்களுக்கு நியாயமற்றதாக தோன்றலாம், ஆனால் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட முடிந்தால் நாம் அனைவரும் பயனடைவோம்' என கூறினார்.

தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய விதிமுறைகளையும் அவர் அறிவித்துள்ளார். இதன்படி அரசாங்க ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அமெரிக்காவில் இதுவரை பாதிக்கும் குறைவான மக்களே தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதாக அரசாங்க தரவுகள் கூறுகின்றன.

ஊக்கத்தொகைகளுக்கு நிதியளிப்பதற்காக மாநிலங்கள் 1.9 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள், அமெரிக்க மீட்பு திட்ட சட்டத்திலிருந்து பணத்தை பயன்படுத்தும் என அறிய முடிகிறது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.