நாட்டினுல் இயங்கும் பாலியல் ரீதியிலான இணையத்தளங்கள் அனைத்தும் முடக்கம்?

நாட்டினுல் இயங்கும் பாலியல் ரீதியிலான இணையத்தளங்கள் அனைத்தும் முடக்கம்?


இலங்கைக்குள் செயற்படுகின்ற அனைத்து பாலியல் ரீதியிலான இணையத்தளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு கொழும்பு மேலதிக நீதவான் லோஷனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான இணையத்தளங்களுக்குள் பிரவேசித்தல், இவ்வாறான இணையத்தளங்களுக்கான பெயர்களை பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல் மற்றும் சேவை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கல்கிஸை பகுதியில் 15 வயதான சிறுமி, இணைய வழியாக பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நேற்று இடம்பெற்ற போதே, கொழும்பு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.