கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாரம்பரிய 14 மருந்து வகைகள்!
advertise here on top
advertise here on top

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாரம்பரிய 14 மருந்து வகைகள்!

கொரோனா வைரஸிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்காக பாரம்பரிய மருத்துவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட 14 உள்நாட்டு மருந்துகளுக்கு ஆயுர்வேத திணைக்களம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, ஆயுர்வேத திணைக்களத்தினால் மருந்துகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

இந்த பாரம்பரிய மருந்துகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 2,000 கொரோனா தொற்றாளர்கள் கிட்டத்தட்ட நாடு முழுவதிலும் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 900 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகியவர்களில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எந்தவொருவரும் இதுவரை இறக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.