ரிஷாத் பதியுதீன் வீட்டில் பல சம்பவங்கள் - ஒவ்வொன்றையும் விசாரிக்க 06 பொலிஸ் குழுக்கள்!

ரிஷாத் பதியுதீன் வீட்டில் பல சம்பவங்கள் - ஒவ்வொன்றையும் விசாரிக்க 06 பொலிஸ் குழுக்கள்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய ஏராளமான வயதுவந்த பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான பல சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த பொலிஸ் குழுக்கள் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட டி.ஐ.ஜி யின் முழு மேற்பார்வையின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிக்காக அழைத வரப்பட்ட பதினொரு சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் பற்றிய தகவல்களை பொலிஸார் இதுவரை கண்டுபிடித்துள்ளனர்.

ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் ஒருவரால் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்ற தகவல் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிபுரிந்த இளம் பெண் ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்தும் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். (திவயின)

தமிழாக்கம் - யாழ் நியூஸ்

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.