
இணையத்தில் வீடியொன்றை வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
எவ்வாறாயினும் குறித்த வீடு ரோஹித ராஜபக்சவுக்கு சொந்தமானதா அல்லது அவரது பெயரில் இருக்கின்றதா என்பது தனக்குத் தெரியாது என்றும், தற்போது அவர் அந்த வீட்டில் வசித்து வருவது மட்டுமே சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.
ரோஹித ராஜபக்ச தனது பிறந்த நாளை கொண்டாட அவ்வீட்டில் ஒன்று கூடியிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து நாங்கள் ரோஹித ராஜபக்சவிடம் வினவிய போதிலும், அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என்று தெரிவித்தார்
இருப்பினும், நாங்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் விசாரித்தபோது, அவர் தனது சகோதரரின் வீட்டில் வாடகை அடிப்படையில் வசித்து வருவதாகக் கூறினார்.
தனது பிறந்தநாளில் எந்த விருந்து அல்லது கூட்டமும் நடைபெறவில்லை என்றும் அவர் எங்களிடம் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)