அனைத்து அத்தியாவசிய இறக்குமதி பொருட்களின் விலையை அதிகரிக்க கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து அத்தியாவசிய இறக்குமதி பொருட்களின் விலையை அதிகரிக்க கோரிக்கை!


இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


இன்று (17) சதொச நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.


உலகம் முழுவதும் விநியோக வலையமைப்பு மற்றும் உற்பத்தி செயன்முறைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


கப்பல் கட்டணம் பாரியளவில் அதிகரித்துள்ளது. கொள்கலன் கட்டணம் 300 சத வீதத்தால் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் உணவு உற்பத்தியில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலையை குறைக்கக் கூடிய பொருட்களின் விலையை உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி அரசாங்கம் குறைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.