நாட்டில் கொரோனா உட்புகாத ஒரே ஒரு பிரதேசம் - அது எப்படி சாத்தியம்? காரணம் இது தான்!

நாட்டில் கொரோனா உட்புகாத ஒரே ஒரு பிரதேசம் - அது எப்படி சாத்தியம்? காரணம் இது தான்!

உலகமெல்லாம் கொரோனா வைரசின் தாக்கம் தாண்டவமாடி வருவதனால் உலகமே பாரிய நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழலில் பல நாடுகள் தமது அனைத்துச் செயற்பாடுகளையும் முடக்கி தத்தமது நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதுவரை பல மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், பல லட்சம் மக்களின் உயிரை காவு கொண்ட 21ம் நூற்றாண்டின் மிகப்பெரும் வைரஸ் தாக்கமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் சில நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இன்றும் இந்த வைரஸ் தாக்கத்தினை சாதுரியமாக எதிர் கொண்டு வருவது எல்லோருடைய புருவங்களையும் ஒரு கணம் உயர்த்திப் பார்க்க வைத்துள்ளது.

இந்த கால கட்டத்தில் கொவிட் தொடர்பான செய்திகளையே அனைத்து ஊடகங்களும் விவரிக்கிறது அதன் அடிப்படையில்தான் இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்ட வடக்கு புற பிரதேசமான கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசம் இதுவரை எந்தவொரு கொரோனா தொற்றினையும் உறுதிப்படுத்தப்படாத மக்களை கொண்ட பிரதேசமாக தன்னை வெளிகாட்டியுள்ளது.

அண்மையில் இரண்டுபேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட போதும் அவர்கள் இருவரும் வாகரை பிரதேச செயலகத்தில் கடமை புரியும் வெளிபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், என்பதை இவ்விடத்தில் சுட்டிக் காட்டத்தக்கது.

வாகரைப் பிரதேசத்தில் இந்த வைரஸின் தாக்கம் இன்னும் ஏற்படவில்லை என்னும் இனிப்பான செய்திக்கு காரணம் என்ன என ஆராயும் போது அந்த மக்களினது உணவு பாரம்பரியம் மறறும் கலாச்சாரம் பெரிதும் செல்வாக்குச் செலுத்துவதே காரணம்.

இன்று நாடே முடக்கம் கொண்டுள்ள சூழ்நிலையில் ஆற்றிய சோற்றிற்கு முருங்கை இலை கறியினையும், குளத்து மீன்களை மேலும் இயற்கையாக கிடைக்கும் உணவுகளையும் பெரும்பாலும் உட்கொண்டு வாழ்ந்துவரும் மக்கள் இயற்கையாகவே தமக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துள்ளமையும் அவர்களது வாழ்க்கை முறைமையும் பிரதான காரணமாகக் கூறலாம்.

அத்துடன் இலங்கை அரசின் கொரோனா சட்டதிட்டங்களை கூடிய பாகம் கடைபிடிப்பதுடன் சுகாதார தரப்பினர் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைத்து செயல்பட்டு வருவதையும் இங்கே விசேடமாக குறிப்பிட்டு கூற முடியும்.

எனினும் இனிவரும் நாட்களில் எப்படி அமையப் போகின்றது என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் . யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களினால் பாதிப்புற்று வாழ்க்கையை கொண்டு நடத்த போராடிக்கொண்டிருக்கும் இப்பிரதேசம் தொடர்பில் ஆரோக்கியம் மிகுந்த தகவலானது எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் செய்தியாகவே அமைந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.