எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் இது தான் - ஜனாதிபதி ஊடக பிரிவு

எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் இது தான் - ஜனாதிபதி ஊடக பிரிவு

எரிபொருட்களின் விலை உயர்வானது, தேசிய பொருளாதாரம், வங்கி வட்டி விகிதங்கள், வெளிநாட்டு இருப்புகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தவும், பொதுமக்கள் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையாகுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம், அதனை பொறுப்பேற்று, உரிய அமைச்சர் பதவி விலக வேண்டுமென நேற்றையதினம் (12) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அதன் பின்னர், இன்றையதினம் (13) ஊடவியலாளர் மாநாடொன்றை கூட்டிய வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, குறித்த முடிவு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை இணைந்தே எடுத்ததாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.