“ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்” விருதை பெறும் இரண்டாவது இலங்கை கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார!

“ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்” விருதை பெறும் இரண்டாவது இலங்கை கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார!

உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியை கொண்டாடும் விதமாக “ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்” ஒரே சமயத்தில் 10 வீரர்களை பட்டியலில் சேர்க்கபடவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கிய வீரர்கள் “ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்” பட்டியலில் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்படுவது வழக்கம். 

அதன்படி, 1996 - 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பை செய்த வீரர்களுக்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார இடம்பிடித்துள்ளார்.

​முன்னதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடிக்கும் இரண்டாவது இலங்கை வீரர் என்ற பெருமையை குமார் சங்கக்கார பெற்றுள்ளார்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.