
பயணத் தடைகளை மேற்கோள் காட்டி இந்த தலைவர்களில் பெரும்பாலானோர் வீட்டிலேயே தங்கியுள்ளதாகவும், அவர்கள் எந்த உத்தியோகபூர்வ கடமைகளையும் செய்யாது, அனைத்து கொடுப்பனவுகளையும் பெறுகிறார்கள் என்றும் பல அமைச்சர்கள் அளித்த புகார்களை பரிசீலித்த பின்னர் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நியமனங்கள் செய்திருந்தாலும், நாட்டின் அபிவிருத்தியில் ஈடுபடாத அனைத்து அதிகாரிகள் மற்றும் அமைச்சின் தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி அவருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அதிகாரிகள் அனைவரும் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் அகற்றப்படுவார்கள், அதற்காக பொருத்தமான பிற நபர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)