பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகையின் பின் பொற்காலம் உருவாகும்!

பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகையின் பின் பொற்காலம் உருவாகும்!

பசில் ராஜபக்சவின் வருகையுடன் கட்சிக்குள் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதன் மூலம் அனைத்து சவால்களையும் சமாளித்து நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனிப்பட்ட விடயத்திற்காக வெளிநாடு சென்றிருந்த பசில் ராஜபக்ச தற்போது நாடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பசில் ராஜபக்சவின் வருகையால் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பசில் ராஜபக்ச பதவியேற்ற பின்னர் ஒரு பொற்காலம் உருவாகும் என்றும், எதிர்க்கட்சியால் அதைத் தாங்க முடியாது போகும் என்றும் அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.