நாட்டில் 70% வேகமாக பரவும் டெல்டா திரிபு - நாடு மீண்டும் முடக்கப்படுமா??

நாட்டில் 70% வேகமாக பரவும் டெல்டா திரிபு - நாடு மீண்டும் முடக்கப்படுமா??

நாட்டில் கொரோனா டெல்டா பரவல் சுமார் 70% அதிகரித்துள்ளதாக வைத்தியர் சுசீ பெரேரா தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்றால், நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.

மேலும், அடுத்த 8 வாரங்களில் டெல்டா திரிபு நாட்டில் வேகமாக பரவக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

எனவே, மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாவிட்டால், மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறிவிடும் என்று மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.