
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
கொரோனா வைரஸ் காரணமாக வயது முதிர்ந்தோரே அதிகளவில் மரணமடைகின்றனர்.
அதன் காரணமாகவே தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது எல்பா திரிபு கொரோனா வைரஸ் மூலம் 60 வயதுக்கு மேற்பட்டோரே பெருமளவில் மரணமடைகின்றனர்.
இதுவரை நாட்டில் 12 கர்ப்பிணித் தாய்மார் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளனர்.
அதே போன்று டெல்டா திரிபு வைரஸ் பரவல் எச்சரிக்கை சூழ்நிலையை உருவாகியுள்ளது.
விசேட மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி முழுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றத் தவறினால் மேலும் 10 வாரங்களுக்குள் அதுவே முக்கிய திரிபு வைரஸாக நாட்டில் இடம் பிடிக்கும் என்றார்.