விரைவில் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு - காரணம் இது தான்!

விரைவில் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு - காரணம் இது தான்!

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தில் தடங்கல் ஏற்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்த காரணத்தினால் எரிபொருள் விநியோகச் செலவும் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி மற்றும் வாகன உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 11ஆம் திகதியிலிருந்து டீசல் லீட்டர் ஒன்றின் விலை 07 ரூபாவினால் அதிகரித்தபடியினால், அதன் நட்டம் தங்கள் மீதும் விழுந்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, தங்களுக்கான கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை சரியான முடிவு வராத காரணத்தினால் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உத்தேசித்திருப்பதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தில் தடங்கல் ஏற்படலாமென தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.