எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து முச்சக்கர வண்டி கட்டணத்திலும் அதிகரிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து முச்சக்கர வண்டி கட்டணத்திலும் அதிகரிப்பு!

அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்ததை அடுத்து, முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்திலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் தில்ருக் தெரிவித்தார்.

இதன்படி ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 50 கட்டணம் அறவிடப்படும் என்று அவர் தெரிவித்தார். கொரோனா தொற்றை அடுத்து பாதிக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், சுமார் 10 ஆண்டுகளாக ஒரு கிலோமீட்டருக்கு 40 முதல் 45 ரூபாய் வரையே வசூலித்து வந்ததாகவும் இம்முறை எரிபொருள் விலை அதிகரிப்பதை இனி தாங்க முடியாது என்றும் அவர் கூறினார்.

முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு தற்போதைய அரசு இதுவரை எந்த சலுகையும் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த கட்டணங்களை அதிகரிப்பதை தவிரவேறு வழியில்லை என்றும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலை அதிகரிப்பால், வேறு பல சிக்கல்கள் எழுந்துள்ளன, மேலும் வாகன பாகங்கள் மற்றும் எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.