இன்று காலை தனிமைப்படுத்தல் தொடர்பில் வெளியான செய்தி!

இன்று காலை தனிமைப்படுத்தல் தொடர்பில் வெளியான செய்தி!

மூன்று மாவட்டங்களில் ஏழு கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மற்றும் குருணாகல் மாவட்டங்களிலேயே இவ்வாறு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று (23) இரவு 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 04 மணி வரை நாடு முழுவதும் பயண தடை விதிக்கப்பட்டுள்ள நேரத்திலேயே இப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட 03 மாவட்டங்களில் உள்ள 07 கிராம சேவகர் பிரிவுகள் பின்வருமாறு:


யாழ்ப்பாணம் மாவட்டம்:

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவு
  • ரெக்லமேசன் மேற்கு கிராம சேவகர் பிரிவு
  • குருநகர் மேற்கு கிராம சேவகர் பிரிவு

மட்டக்களப்பு மாவட்டம்:

காத்தான்குடி பொலிஸ் பிரிவு
  • மஞ்சதொடுவாய் வடக்கு கிராம சேவகர் பிரிவு
  • மஞ்சதொடுவாய் தெற்கு ஜின்னா வீதி

மன்முனை பொலிஸ் பிரிவு
  • மாமாங்கம் கிராம சேவகர் பிரிவு

குருணாகல் மாவட்டம்:

குருணாகல் பொலிஸ் பிரிவு-
  • இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் வில்கொட கிராமம்
  • கனுக்கெட்டிய கிராம சேவகர் பிரிவின் கனுக்கெட்டிய கிராமம்
இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 442 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.