தேரர் ஒருவர் பிரதான வீதியின் நடுவில் அமர்ந்து எதிரிப்பு ஆர்ப்பாட்டம் - காரணம் இது தான்!

தேரர் ஒருவர் பிரதான வீதியின் நடுவில் அமர்ந்து எதிரிப்பு ஆர்ப்பாட்டம் - காரணம் இது தான்!

தம்புள்ள பொருளாதார மையம் அருகே ஏ -9 வீதியின் நடுவில் தேரர் ஒருவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திம்புலாகல விகாரை வசிக்கும் மாத்தளே ஷாசரத்ன எனும் தேரரே இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டுள்ளார்.

தேரர் வீதியின் நடுவே அமர்ந்து நாட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார். தம்புள்ள பொலிஸ் ஓ.ஐ.சி இனால் இவரை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

பின்னர் தம்புள்ள நகராட்சி மன்றத்தின் மேயர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, ஜனாதிபதி செயலகத்துடன் ஒருவரை தொடர்பு கொள்ள நகராட்சி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் அவர் நகரசபையில் செயலாளர் ஒருவருடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்ததாகவும் பின்னர் அறிக்கை இன்றை பெற்றுக்கொள்வதற்காக தேரரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும், தேரர் இது தொடர்பில் பொலிஸார் கைது செய்ய மாடாட்டாஎ என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவரது வேண்டுகோள் என்னவென்றால், 'நாடு மூடப்பட்டுள்ளது, ஆனால் கடைகள் திறக்கப்படுகிறது, வர்த்தகம் செய்யப்படுகிறது, நாட்டை இவ்வாறு மூடியிருப்பது எந்த அர்த்தமும் இல்லை, சரியாக நாட்டை மூடவும், மக்களுக்கு பொய் சொல்லாமல் நாடு முழுவதையும் திறக்கவும். '

ஜனாதிபதிக்கும் தேரர் வன்மையாக கண்டித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.