இலங்கை அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட இலங்கை கிரிக்கட் வீரர்கள்!

இலங்கை அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட இலங்கை கிரிக்கட் வீரர்கள்!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்குவரும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹன் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மூவரையும் உடனடியாக நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழுக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் குறித்த மூன்று வீரர்களும், சுகாதார உயிர்குமிழி நடைமுறையை மீறி, செயற்பட்ட குற்றச்சாட்டிலேயே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் தெரிவிக்கின்றார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.