“நான் இறந்ததும் நான் கூறிய மற்றும் செய்ததை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளுங்கள்” - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

“நான் இறந்ததும் நான் கூறிய மற்றும் செய்ததை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளுங்கள்” - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

தனக்கு இப்போது 76 வயதாகிறது, நான் இறந்ததும் தான் செய்ததைவைகளையும் கூறியவற்றையும் எதிர்கால தலைமுறையினர் பின்பற்றி நடந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவரின் சமூக ஊடக கணக்கில் பதிவு செய்யப்பட்டவையாகும்.

எனக்கு இப்போது எழுபத்தாறு வயது. எழுபத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நான் தனியாக இந்த உலகத்திற்கு வந்தேன். வெற்று கைகள். நான் மட்டுமல்ல, நம் அனைவருமே. ஒருநாள் தனியாகப் போகவிருக்கின்றோம். வெற்று கைகளுடன். ஒரேயொரு விடயத்தை தவிர. அதுதான் நம் வாழ்நாள் முழுவதும் நாங்கள் சொன்ன மற்றும் செய்தவற்றிலிருந்து எஞ்சியிருக்கும் நல்ல பெயர் அல்லது கெட்ட பெயர்.

இந்த யதார்த்தத்தை நான் சிறு வயதிலிருந்தே உணர்ந்தேன். இந்த வாழ்நாளில் நம் வாழ்க்கையை அறிவூட்டுவதற்கும், இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். என் வாழ்நாள் முழுவதும் அந்த கடமையை என் திறனுக்கு ஏற்றவாறு நிறைவேற்ற முயற்சித்தேன். இந்த நாட்டிற்காக, இந்த நாட்டு மக்களுக்காக, உலகத்திற்காக என் வாழ்நாளில் நான் ஏதாவது செய்திருந்தால், இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றவே நான் இதை எல்லாம் செய்தேன்.

நான் இறந்தபோது ஒரு நாள் நான் செய்த மற்றும் கூறியவைகளை எதிர்கால தலைமுறையினர் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டால் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

பிறந்த நாள் வாழ்த்து சொன் அனைவருக்கும் நன்றி. 

(யாழ் நியூஸ்) 


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.