
குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோர் இங்கிலாந்தில் இருந்து வருகை தரும்போது விமானத்தில் வியாபார வகுப்பில் (Business Class) இன்றி சாதாரண வகுப்பு (Economy Class) ஆசனங்களிலேயே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கிரிக்கட் வீரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு வசதிகள் எதுவும் அவர்களுக்கு
வழங்கப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட செலவை அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)