
பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்கு வரவழைத்தும் நாடு முன்னேற்றமடையாவிட்டால், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப மருமகள்களை வரவழைக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
திருமதி ஷிராந்தி ராஜபக்ச மற்றும் அவரது மருமகள்மார்களையும் பாராளுமன்றத்திற்கு அழைத்து அமைச்சர்களாக நியமணம் செய்து நாட்டை கட்டியெழுப்புமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
முதலில் அவர் 2/3 இல்லாமல் முடியாது என்றனர், பின்னர் 20 இல்லாமல் முடியாது என்று சொன்னார்கள், இப்போது பசில் இல்லாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று கூறுகின்றனர். இப்ப்வாறே எதிர்காலத்தில் வேறு காரணத்தைக் கொண்டு வரவும் முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)