கிணற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட நான்கு வயது குழந்தை!

கிணற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட நான்கு வயது குழந்தை!


மட்டக்களப்பு – வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனையில் 04 வயது குழந்தை ஒன்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.


வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதையடுத்து பெற்றோர் தேடியுள்ளனர்.


இதன்போது நேற்றிரவு வீட்டிற்கு முன்பாக உள்ள கிணற்றில் குழந்தை கிடந்ததை கண்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததன் பின்னர், அங்கு விரைந்த பொலிஸார் குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.


குழந்தை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் கூறினர்.


சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.