பியூமி ஹன்சமாலிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த சரத் வீரசேகர?

பியூமி ஹன்சமாலிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த சரத் வீரசேகர?


நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தனிமைப்படுத்தல் முகாமைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நடிகை பியூமி ஹன்சமாலிக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் அழகுக்கலை நிபுணரான சந்திமால் ஜயசிங்க பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.


இதில் பங்கேற்ற 15 பேர் வரை கைது செய்யப்பட்டு, தற்போது பதுளையிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இதனிடையே நேற்று புதன்கிழமை அவர்கள் கொழும்பில் வைத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் பொலிஸ் பஸ் வண்டியில் இவர்கள் 15 பேரும் அழைத்துச் சென்றபோது, ஊடகங்களுக்கு முன்பாக பியூமி ஹன்சமாலி இப்படி கூறியிருந்தார்.


அதாவது, உடுத்திய உடையிலேயே இவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்கின்றனர். மாற்று உடைகள்கூட இல்லை என்று கூறியிருந்தார்.


இந்நிலையில் அவர்கள் பயணம் செய்யும் வழியின் இடையே அமைச்சர் சரத் வீரசேகர, பியூமி ஹன்சமாலியின் தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டு அவரது கவலையை கேட்டறிந்திருப்பதாக கூறப்படுகிறது.


பஸ்ஸிற்குப் பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அதிகாரிக்கு கூறி கொஸ்வத்த பிரதேசத்தில் பஸ்ஸினை நிறுத்தும்படியும் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


அந்த சந்தர்ப்பத்தில் அவர்களது உறவினர்களிடம் கூறி தனிமைப்படுத்தலில் ஈடுபடும் காலத்தில் பயன்படுத்த ஆடைகளை அவர்கள் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த விடயத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேள்விபட்டபோதிலும் அவர் அழைப்பு எடுக்கும் முன்னரே அமைச்சர் அழைப்பினை மேற்கொண்டு சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.


-ட்ரூ நியூஸ்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.