சுகாதார நிலையத்தை உடைத்து உள்ளே இறங்கி திரிபோசா பைக்கற்றுக்கள் திருட்டு!

சுகாதார நிலையத்தை உடைத்து உள்ளே இறங்கி திரிபோசா பைக்கற்றுக்கள் திருட்டு!


அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகி கிராமத்தின் சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 30 திரிபோசா பைக்கற்றுக்களை கள்வர்கள் திருடிச் சென்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


நிறை குறைந்த பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்காக வழங்க வைத்திருந்த திரிபோசா பைக்கற்றுகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ். அகிலன் தெரிவித்தார்.


சுகாதார நிலையத்தின் கதவுகளை உடைத்த கள்வர்கள் குறித்த திரிபோசா பைக்கற்றுகளை எடுத்து சென்றுள்ளதாகவும் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.


இது மிகவும் இழிவான செயல் எனவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


-வி.சுகிர்தகுமார்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.