இணையத்தில் வைரலான தடகள வீரர், ஒலிம்பிக் தங்க நாயகன் உசேன் போல்டின் இரட்டைக் குழந்தைகளின் வித்தியாசமான பெயர்கள் மற்றும் புகைப்படங்கள்!

இணையத்தில் வைரலான தடகள வீரர், ஒலிம்பிக் தங்க நாயகன் உசேன் போல்டின் இரட்டைக் குழந்தைகளின் வித்தியாசமான பெயர்கள் மற்றும் புகைப்படங்கள்!

தடகள வீரர், ஒலிம்பிக் தங்க நாயகன் உசேன் போல்டின் இரட்டைக் குழந்தைகளின் பெயர் இணையத்தில் வைரலாகி வருகிறது. தடகளப் போட்டிகளில் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து பதக்கங்களைப் பதிக்கும் உசேன் போல்ட்டுக்கு லைட்னிங் போல்ட் என்ற அடைமொழியும் உண்டு. அதையே தனது மூத்த மகளுக்கு அவர் பெயராகவும் சூட்டினார். ‘

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. வித்தியாசமாக அமைந்துள்ள குழந்தைகளின் பெயரை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.

இதில் ஆண் ஒன்று, பெண் ஒன்று. அவர் தனது குழந்தைகளுக்கு செயின்ட் லியோ போல்ட், தண்டர் போல்ட் எனப் பெயரிட்டுள்ளார்.

இவரது மூத்தக் குழந்தையின் பெயர் லைட்னிங் போல்ட். நேற்று ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினத்தன்று தங்களின் இரண்டாவது குழந்தை பிறந்ததை அறிவித்த உசேன் போல்ட், காசி பென்னட் தம்பதிகள் குழந்தைகளின் பெயரையும் அறிவித்துள்ளனர்.

இந்தப் பெயரை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.

யார் இந்த உசேன் போல்ட்?

உசேன் போல்ட்டைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஜமைக்காவைச் சேர்ந்த இவர், ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் 8 முறை தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர். ஓட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, சில காலம் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் செலுத்தினார்.

ஆஸ்திரேலியாவில் ‘சென்ட்ரல் கோஸ்ட் மரைன்ஸ்’ என்ற அணிக்காக சில போட்டிகளில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து சில காலம் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்திவந்த இவர், 2019-ம் ஆண்டில் அனைத்து விதமான விளையாட்டுகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு இசைத்துறையில் கால் பதித்துள்ளார்.

நஜென்ட் என்.ஜே.வாக்கர் என்ற தன் நண்பருடன் இணைந்து, ‘லிவிங் தி ட்ரீம்’ என்ற பாடலை வெளியிட்டுள்ள உசேன் போல்ட், இப்போது இத்துறையில் உலக அளவில் நம்பர் ஒன் ஆகும் லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை...

அடுத்த மாதம் ஜப்பானில் தொடங்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தான் பங்கேற்கப்போவதில்லை என் ஏற்கெனவே உசேன் போல்ட் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

34 வயதாகும் உசேன் போல்ட், இதுவரை 2008, 2012 மற்றும் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று 8 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளார். தொடர்ச்சியாக மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் 100மீ மற்றும் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றவர் என்ற பெருமையைக் கொண்டவர். இவர் தனது தடகளப் போட்டிப் பயணத்தில் 23 தங்கப் பதக்கங்களைக் குவித்திருக்கிறார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.