நாட்டில் மிகவும் வயது குறைந்த கொரோனா மரணம் கண்டி, கம்பளையில் பதிவானது!

நாட்டில் மிகவும் வயது குறைந்த கொரோனா மரணம் கண்டி, கம்பளையில் பதிவானது!


கொரோனா தொற்று காரணமாக நாட்டில் மிகவும் வயது குறைந்த மரணம் கம்பளையில் பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக எட்டு நாள் குழந்தையே இவ்வாறு மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆண் குழந்தை ஒன்றே கம்பளை, புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது.

குழந்தை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்ததோடு, மருத்துவமனையில் வீடு திரும்பிய நாள் முதல் குழந்தை தொடர்ச்சியாக வாந்தி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் பிற்பாடு குறித்த குழந்தை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டு பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  

2021 மே 27 ஆம் திகதி குழந்தை கம்பளை அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

மேலும் மரணத்திற்கான காரணம் கொரோனா நிமோனியா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குழந்தையில் தாய் மற்றும் தந்தைக்கு பிசிஆர் பரிசோதனை இன்னும் செய்யப்படாத நிலையில், குழந்தைக்கு கொரோனா தொற்று பெற்றோரிடமிருந்து தொற்றியிருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.