பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று!

பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று!

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்றைய தினம் சந்திக்க சென்ற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு பாராளுமன்ற உறுப்பினரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் முடிவுகள் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றியிருந்தமை குறிபப்பிடத்தக்கது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.