நேற்றைய வாள்வெட்டு சம்பவம்! 6 மாத சிசுவின் உயிர் பறிபோனது!

நேற்றைய வாள்வெட்டு சம்பவம்! 6 மாத சிசுவின் உயிர் பறிபோனது!


திருகோணமலை – கப்பல்துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 6 மாத சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.


குடும்பத்தகராறு காரணமாக தனது மனைவியின் தந்தை மற்றும் தாயை தாக்கிய சந்தேகநபர், தனது 6 மாத சிசுவையும் வாளால் வெட்டியுள்ளார்.


நேற்று (19) மாலை இடம்பெற்ற சம்பவத்தில் வாள் வெட்டுக்கு இலக்கான தம்பதியினரும் சிசுவும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


வீடியோ இங்கே.. https://www.yazhnews.com/2021/06/video_17.html


எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


வெட்டுக் காயங்களுக்குள்ளான 43 வயதான பெண்ணும் 47 வயதான ஆணும் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.


சம்பவத்தில் பெண்ணின் கை துண்டிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்


சம்பவம் தொடர்பில் சீனன்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.