பொலிஸ் நிலையத்தினுள் பொலிஸ் அதிகாரியினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி!

பொலிஸ் நிலையத்தினுள் பொலிஸ் அதிகாரியினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி!

முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்கு நெலுவ பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சிறுமி ஒருவரை குறித்த பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் முத்தமிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கீழ்தரமான செயலில் ஈடுபட்ட குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெலுவ மேல் கிகும்மடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் தனது தாயுடன் நேற்ற (29) குறித்த பொலிஸ் நிலையத்திற்கு புகார் ஒன்றை அழிப்பதற்காக  நெலுவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

விசாரணைகளை மேற்கொள்வதற்காக தாய் மற்றும மகள் இருவரையும் இரவு பொலிஸ் நிலையத்தில் தங்குமாறு தெரிவித்தனர். 

இன்று (30) காலை பணிக்கு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாம் தங்கியிருந்த அறைக்கு வந்து தனது மகளை முத்தமிட்டதாக தாய் குற்றஞ்சாட்டினார்.

இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ள சிறுமி இளைஞன் ஒருவனை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் அவரை சந்திக்க சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த இளைஞனால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இளைஞன் சிறுமியின் காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காணொளி மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதாக கூறி அச்சுறுத்தி குறித்த இளைஞன் சிறுமியை பல முறை அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் அறிந்து கொண்ட பின்னர் இளைஞனை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ள நிலையில் இது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக நேற்று பொலிஸ் நிலையம் சென்ற போதே இச்சம்பவம் நேர்ந்துள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.