🛑 நாட்டின் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது!

🛑 நாட்டின் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது!

தற்போது பெய்துவரும் கடும் மழை, வெள்ளம் காரணமாக நாட்டின் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

நாட்டின் தென்மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை தொடருமென்றும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, புத்தளம், குருநாகல், கம்பஹா,கேகாலை, கண்டி, கொழும்பு, நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வானிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.