இங்கிலாந்தில் பொறுப்பின்றி செயல்பட்ட வீரர்கள் மூவருக்கும் 05 ஆண்டு போட்டித்தடை!

இங்கிலாந்தில் பொறுப்பின்றி செயல்பட்ட வீரர்கள் மூவருக்கும் 05 ஆண்டு போட்டித்தடை!

இலங்கை கிரிக்கட் வாரிய (எஸ்.எல்.சி) அதிகாரிகள் நேற்று (28) இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உயிர் குமிழியை உடைத்து ஹோட்டலில் இருந்து வெளியே சென்ற மூன்று கிரிக்கெட் வீரர்கள் மீதான ஐந்தாண்டு தடை குறித்து கலந்துரையாடப்பட்டதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோன்ற சூழலில் தான் சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது ஐந்தாண்டு தடை விதிக்க வேண்டும் என்ற எண்ணம் இலங்கை கிரிக்கட் வாரிய (எஸ்.எல்.சி) அதிகாரிகள் மனதில் எழுந்துள்ளது. இந்த வீரர்களுக்கு ஒரு வருட தடை போதுமானது என்று சிலர் கூறிய போதும், எதிர்கால கிரிக்கட் வீரர்கள் மீது படிப்பினையொன்றாக ஐந்தாண்டு தடை விதிக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மையானவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் குறித்த மூவருக்கும் கடந்த கால தவறுகள் பல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

குற்றம் சாட்டப்பட்ட மூன்று வீரர்களும் நேற்று பிற்பகல் வரை இங்கிலாந்தில் இருந்ததோடு, அவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.